திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கடையின் மீது மோதியது. இதனால் கடையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேக் பிடிக்காத பேருந்துகள், டயர்கள் சரியில்லாத பேருந்துகளை இயக்குவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அரசு பேருந்தின் இருக்கைகள் கிழிந்து இருப்பதாகவும் தகரங்கள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்துகள் அனைத்தும் மழை நீரால் ஒழுகுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.