தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவருடைய மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியானது. நடிகை சோபிதா தமிழில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று சோபிதா மற்றும் நாக சைதன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.