
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சையிப் அலிகான். இவர் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் திருடன் ஒருவன் புகுந்துள்ளான். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் நடிகர் சையிப் அலிகான் வசித்து வரும் நிலையில் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்ததை அவர் பார்த்ததால் அவரை ஒரு கத்தியால் 6 இடங்களில் குத்தியுள்ளான்.
அந்தத் திருடன் கத்தியால் குத்தியதில் இரு இடங்களில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரபல நடிகர் ஒருவர் வீட்டில் திருடன் புகுந்த நிலையில் அவரை கத்தியால் தாக்கி விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.