
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவர் மீது நேற்று முன்தினம் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டுக்குள் நுழைந்து பணிப்பெண்ணுடன் ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில் அவரை தடுக்க முயன்ற போது அவர் நடிகரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். தற்போது சயிப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மும்பையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சிக்கிறார்கள்.
இதற்கு தற்போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். இதற்காக மும்பையை பாதுகாப்பற்ற நகரம் என்று முத்திரை குத்துவது சரியல்ல. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். மும்பை நாட்டிலேயே ஒரு பாதுகாப்பான பெரிய நகரம். இந்த சம்பவத்தில் உள்நோக்கம் என்ன எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது போன்றவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.