எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் ராஜேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 21வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர், பிரச்சனை, உதயம், மண்மொழி உள்ளிட்ட இதழ்களையும் நடத்தி வந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அஸ்வகோஷ் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது