தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றியை பதித்தார். அதன்பிறகு நடிகர் விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் அட்லீக்கும் பிரியாவுக்கும் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் அட்லீயின் நிறத்தை ஒருவர் கேலி செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு வட இந்திய புகைப்படக் கலைஞர் இயக்குனர் அட்லீயை பார்த்து இட்லி சார் இட்லி சார் என அழைக்கிறார். அதில் ஒரு புகைப்பட கலைஞர் இவ்வளவு கருப்பாக இருக்கிறாரே தெரியவே இல்லையே என்று கூறுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)