பிரபல இத்தாலிய முன்னாள் கால்பந்து வீரரான ஜியான்லூகா வில்லி (58) வெள்ளிக்கிழமை காலமானார். 2020 இல் கணையப் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற வில்லி, டிசம்பர் 2021 இல் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜியான்லூகா இத்தாலிக்காக 59 போட்டிகளில் விளையாடி 16 கோல்களை அடித்தார். 1996 உலகக் கோப்பையில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.