தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம். இப்படி இருக்கும்போது நடிகர் சத்யராஜ் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

இதற்கு தற்போது நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கும் இது புதிய செய்திதான். இதுவரை என்னிடம் யாரும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று  படத்தில் நடிக்க வேண்டும் என்று அணுகவில்லை. ஒருவேளை என்னை அணுகினால் படத்தில் நடிப்பது பற்றி பின் யோசிக்கலாம். யாரோ சும்மா எதையோ கிளப்பி விடுகிறார்கள். மேலும் நாத்திக கருத்துகளை அதிகம் பேசும் எம்.ஆர் ராதா பல படங்களில் ஆன்மீகவாதியாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.