நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு ரயில் பிப்ரவரி 5ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் பிப்ரவரி 5ஆம் தேதி காலை 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும். இது கிருஷ்ணாபுரம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், புவனேஸ்வரம், கட்டாக் மற்றும் காராக்கூர் வழியாக பிப்ரவரி ஆறாம் தேதி மாலை 6.45 மணிக்கு சாலை மார்க் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது