தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதன்படி பிஎஸ்சி (நர்ஸிங்), பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 40% மதிப்பெண்கள் பெற்று ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.