பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை மெஹ்ரின் ஷா. இவர் ஒரு படப்பிடிப்பின் போது இந்திய தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் இயக்குனர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை மெஹ்ரீன் ஷா கூறியுள்ளதாவது, ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இந்திய தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
அதோடு ஒரு ஹோட்டலுக்கு பாலியல் தொழிலாளிகளையும் அவர்கள் அழைத்துச் சென்றனர். அவர்களுடைய ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால் ஒரு நாள் முழுக்க நான் பட்டினியாக கிடக்க வேண்டி இருந்தது. எனக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் படக்குழு ஊழியர் ஒருவர் எனக்கு பலவிதமான உதவிகளை செய்தார். என்னைப் போன்று மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், சக நடிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக நடிகை கூறியுள்ளார். மேலும் இந்திய தயாரிப்பாளர் மீது பாகிஸ்தான் பாலியல் புகார் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
پاکستانی اداکارہ سیدہ مہرین شاہ نے دعویٰ کیا ہے کہ فلم کی شوٹنگ کے دوران انڈین پروڈیوسر نے ان کو جنسی ہراسانی کا نشانہ بنایا #MehreenShah pic.twitter.com/crSPO7lUJe
— Khabarwalay (@khabarwalay0) January 10, 2023