உத்திரபிரதேச மாநிலத்தில்  மணமகன் ஒருவன் தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை பதிவு செய்வதற்காக சென்றபோது திடீரென பெண் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். அதாவது நவாப் கஞ்ச் பகுதியில் நீரஜ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பாபா பெண் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணை நீரஜுக்கு பிடித்த தால் கிட்டத்தட்ட ஒரு மாதமாக செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தார். அதன் பிறகு நீரஜ் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு 3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசாக வழங்கினர்.

அதாவது அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த போது மணமகன் வீட்டார் அந்த பெண்ணுக்கு பரிசு வழங்கிய நிலையில் பின்னர் திருமணத்தை முறையாக பதிவு செய்ய முடிவு செய்து கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு திருமணத்தை பதிவு செய்வது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து புகைப்படம் அனைத்தும் எடுத்த பிறகு திடீரென அந்த பெண்ணும் பாபாவும் காணாமல் போய்விட்டனர். இதைத்தொடர்ந்து நீரஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காணாமல் போன பெண்ணை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.