பாபர் அசாமுடன் மோதலா?…. “குடும்பம்”….. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாஹீன் அஃப்ரிடி…. வைரல் போட்டோ.!!

பிளவு பற்றிய செய்திகளுக்கு மத்தியில் பாபர் அசாமுடன் அன்பான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார் ஷாஹீன் அஃப்ரிடி. 

பாகிஸ்தான் பந்துவீச்சு முன்னணி ஷாஹீன் அப்ரிடி  தனது கேப்டன் பாபர் அசாமுடன் ஒரு அன்பான படத்தைப் பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக அவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.கடந்த வாரம், இலங்கைக்கு எதிரான 2023 ஆசியக் கோப்பையில் தோல்வியடைந்த பின்னர் இருவரும் டிரஸ்ஸிங் ரூமில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

மூத்த வீரர்களின் சீரற்ற செயல்பாடுகள் குறித்து பாபர் அசாம் தனது விரக்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன. பதிலுக்கு, ஷாஹீன் அப்ரிடி பாபர் பேசும்போது குறுக்கிட்டு, நேர்மறையான அம்சங்களையும் பார்க்குமாறும், குறைந்த பட்சம் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை அங்கீகரிக்குமாறும் கேட்டுக் கொண்டார் என தகவல் வெளியானது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்த குறுக்கீடு பிடிக்கவில்லை மற்றும் யார் சிறந்ததைக் கொடுத்தார்கள், யார் கொடுக்கவில்லை என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார், இது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியதாகவும், முகமது ரிஸ்வான் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார் என பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்தது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக இவ்விவகாரம் குறித்து இரு வீரர்களும் பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி செவ்வாயன்று (இன்று) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு படத்தைப் பகிர்ந்ததன் மூலம் அவருக்கும், பாபர் அசாமுக்கும் இடையே எல்லாம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அவர் குடும்பம் என பதிவிட்டு ஹாட் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதில் இருவரும் கையில் டீ கிளாசுசன் பேசிக்கொண்டு இருப்பது போல இருக்கிறது. இந்த பதிவிற்கு கீழே பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply