பிரதமர் நரேந்திர மோடி சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக திகழும் நிலையில் தான் எழுதிய கவிதைகளை மன்கிபாத் உரையின்போது அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கர்பா பாடலை எழுதியுள்ளார். இந்தியாவில் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தசரா கலை கட்டியுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த 9 தினங்களும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு மக்கள் பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவார்கள்.

இந்த பண்டிகையை முன்னிட்டு முதல்வர் கர்பா பாடல் எழுதியுள்ளார். குஜராத்தில் கர்பா நடனம் நவராத்திரியில் ஆடுவது மிகவும் பிரபலம். இந்த பாடலை பாடகர் பூர்வ மந்திரி பாடியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் வரிகளில் உருவான கர்பா பாடல் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.