முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கவுதமை கைது செய்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக நேற்று இரவோடு இரவாக கைது செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

‘கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலய அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு’ என கண்டித்துள்ளார்.