தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற அவர், அண்ணாமலையின் கதையை தேர்தலுக்கு பிறகு பாஜக முடித்து வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.