
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இன்று சென்னை ஆவடியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை நினைத்து வேதனையுடன் இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார். அதோடு அரசியலையும் ஆன்மீகத்தையும் கலந்து சில கூட்டம் வன்முறையை தூண்ட நினைகிறார்கள் எனவும் ஆனால் தமிழ்நாடு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்று கூறினார்.
மேலும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி ஆகிய இருவர் மட்டுமே போதும் என்றார். அதாவது திமுக ஆட்சியில் இருக்கும் வரை பாஜக தலைவராக அண்ணாமலையும் ஆளுநராக ஆளுநர் ரவியும் இருக்க வேண்டும். நாம் பரப்புரை செய்யாமல் இவர்கள் இருவரும் பேசியே மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள். கவுண்டமணி காமெடி போல் ஆளுநர் பேசுவதை கேட்கும் போது புரியவில்லை. வீட்டுக்கு சென்றால் கூட அவர் பேசுவதை கேட்டால் புரியவில்லை எனக்கு கூறியுள்ளார். ஆளுநர் மற்றும் அண்ணாமலை இருவரும் இருக்கும் வரை திமுகவுக்கு கவலை இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியது பேசுபொருளாக மாறி உள்ளது.