ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். நான்காம் கட்ட தேர்தலின் பொழுது பருக்காபாத்தில் இந்த சம்பவமானது நடந்துள்ளது. இது குறித்த வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.