பாஜகவில் இணைய பேரம் பேசப்பட்டதாக டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தனது நெருங்கிய நண்பரை தொடர்புகொண்டு, பாஜகவில் இணைய வேண்டும்; இல்லையென்றால் அடுத்த மாதமே ED தன்னை கைது செய்யும் என மிரட்டியதாக கூறிய அவர், இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன்; எதையும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.