சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு கருப்பணகவுண்டன்வலசு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முகேஷ் கண்ணாவும், பூபாலனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வாலிபர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.