தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ரூ.12 லட்சம் செலவில் 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மூன்று மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பழனி கோவில் குடமுழக்கு தமிழில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, வருகிற 27-ஆம் தேதி பழனி கோவிலில் குடமுழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பழனி முருகன் கோவில் குடமுழகிற்கு முழுக்க முழுக்க பத்திரிக்கை தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை பறைசாற்றும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்களை ஒழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க அரசு பதவி ஏற்ற பின்பு தமிழை வளர்த்து வருகிறது. அதனால் பழனி கோவிலில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும் என தெரிவித்துள்ளார்.