மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

53 மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் 20 பேர் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர். பாத்திரங்களை கழுவும்போது உணவில் செத்துப்போன பாம்பு இருந்ததை ஊழியர்கள் பார்த்து உள்ளனர். எனினும் அதற்குள் மாணவ, மாணவிகள் சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் பள்ளி முன்பு திரண்டு தலைமை ஆசிரியரின் காரை அடித்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களிடமிருந்து தலைமை ஆசிரியயை பத்திரமாக மீட்டனர்.