சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 11 குழந்தைகள்,3 ஆசிரியர்கள் உட்பட 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து நடந்த உடன் அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.