கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு மாணவி பரோட்டா சாப்பிட்டு தூங்கிய நிலையில் அந்த மாணவி உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது துடியலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் கீர்த்தனா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்றிரவு ஒரு கடையில் வாங்கிய பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார்.
ஆனால் மறுநாள் காலை அந்த மாணவி எழுந்திருக்கவே இல்லை. அந்த மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு பரோட்டா தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை பெற்று வருகிறது.