ஆப்பிரிக்க நாட்டுகளில் ஒன்றுதான் ஈகுவடோரியல் கினியா நாடு ஆகும். இந்த நாட்டில் தற்போது மார்பர்க் வைரஸ் பரவி வருகின்றது. இது குறித்து அறிந்தவுடன் அந்நாடு உலக சுகாதாரம் அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வைரசானது எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது அதிகமாக பரவும் தன்மை கொண்டது.

இந்த வைரஸ் கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் நோயாளிகளுக்கு ஏழு நாட்களில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளை காண்பிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மார்பர்க் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 9 பேருடைய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு மார்பர் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்புகுள்ளான மண்டலங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த நாட்டிற்கு 500 சுகாதார உபகரணங்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.