பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.11) அஜித் நடித்த “துணிவு”, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கென சென்ற 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன பின் 2 ரசிகர் மன்றத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அதனால் சினிமா தியேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில், டிக்கெட் வாங்காதவர்கள் திரையரங்கிற்குள் நுழைந்ததால் படம் திரையிட முடியாமல் போனது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி திரையரங்கில் இருந்து அவர்களை விரட்டினர். இதற்கிடையில் டிக்கெட் தர மறுத்த திரையரங்கத்தின் மீது கற்கள் வீசப்பட்டதால் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.