விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சமீபத்தில் சதீஷ் விலகினார். அது தொடர்பாக அத்தொடரில் ராதிகா கேரக்டரில் நடித்துவரும் ரேஷ்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நானே சீரியலில் இருப்பேனா இல்லையா என்று தெரியாது” என்ற அதிர்ச்சி பதிலை அளித்தார். பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து அடுத்தடுத்து பிரபலங்கள் விலகுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பிறகு சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார்.