உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் கான்ட் ரயில்வே நிலையம் உள்ளது. இங்குள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சம்பவ நாளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமானது. இந்த விபத்து  நேற்று முன் தினம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் என பலர் ஈடுபட்டு போராடி பல மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

தீ கட்டுக்குள் வராமல் மளமளவென எரிந்தது. இருப்பினும் அதிகாரிகள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.