அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக காட்டுமன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து காவேரி மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த காவேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று காவேரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.