பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது X தளம் மூலமாக மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால் ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருவது ஏன்? இரண்டு இயற்கை பேரிடர்கள் வந்த போதும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்காதது ஏன்? பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டம் என ஒன்றாவது உண்டா? திசை திருப்பல்களில் இதற்கெல்லாம் விடை அளியுங்கள் பிரதமர் அவர்களே என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.