சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேஜர் முகுந்து வரதராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் முகுந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார். அவருக்கு இந்திய அரசின் மிக உயர்ந்த அமைதி கால வீர பிரதான அசோக் சக்கர விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2015-ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் அசோக் சக்ரா விருதை கொடுத்தார். அந்த விருதை முக்குந்த் வரதராஜரின் மனைவி இந்து ரபேக்கா வர்கீஸ் பெற்றுக் கொண்டார். அமரன் திரைப்படத்தை கமலஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததாகவும், கண்கள் கலங்கி விட்டதாகவும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். அதற்கு கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞரான இன்ப துரை தனது சமூக வலைதள பக்கத்தில் குடியிருப்பதாவது, மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளித்து இறுதி மரியாதை செலுத்த அமைச்சர் சின்னய்யாவை நேரில் அனுப்பி 12 லட்சம் ரூபாய் பணம் முடிப்பை வழங்கி ரீலை பார்த்து இல்லாமல் ரியலுக்காக கண்கலங்கி துணை நின்றவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார். மிகுந்த வீர மரணம் அடைந்தபோது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரது மரணத்திற்கு அரசு மரியாதை கொடுத்து இரங்கல் தெரிவித்தார். அதனையும் இன்ப துரை சுட்டிக்காட்டி உள்ளார்.