மத்திய பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது மங்களூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக மணீஷ் திர்கி (27), முகேஷ் சிங் (28), ஜெய்சிங் (30) ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதாவது முன்னதாக 8 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் நால்வரும் அங்கு சென்று சிறுமிக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்தனர். பின்னர் உன் தந்தையின் நண்பர்கள் என்று கூறி அந்த சிறுமியை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த சிறுமியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில்  ஈடுபட்டதோடு அவரை கழுத்தை இருந்து கொலை செய்தனர். இந்த வழக்கில் நால்வர் குற்றவாளிகளாக கருதப்பட்ட நிலையில் மூவரை கைது செய்த காவல்துறையினர் ஒருவரை தேடி வருகிறார்கள். மேலும் முதல் முறையாக தற்போது மங்களூர் போக்சோ  நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.