திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் வந்த இளம்பெண் கொடைக்கானல் எம் எம் தெருவில் இருக்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது இளம்பெண் விஷம் குடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் வந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவரது மனைவி மகாலட்சுமி என்பது தெரியவந்தது. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் மகாலட்சுமி சுற்றுலா வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் மகாலட்சுமி பக்கத்து வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக மகாலட்சுமி தனது தம்பியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். ஆனால் அவருடன் வந்த சசிகுமார் இருசக்கர வாகனத்தை விடுதியிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இருவரும் எதற்காக வந்தனர்? மகாலட்சுமியின் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.