மணிப்பூர் மாநிலத்தில் தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு பாய்ந்தது.

இந்நிலையில் காயமடைந்த சிறுவனை அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஆம்புலன்ஸ் மீது தாக்கி தீ வைத்தனர். இதில் சிறுவன் மற்றும் அவனின் தாய் மற்றும் உறவினர் ஆகிய மூவரும் கொடூரமான முறையில் ஆம்புலன்ஸில் வைத்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.