உலகின் சக்தி வாய்ந்த நபர் என்று அமெரிக்க ஜனாதிபதி அழைக்கப்படும் நிலையில் அவருடைய அலுவல் பூர்வ இல்லம் வெள்ளை மாளிகை என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளை மாளிகை 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மாளிகையில் பேய்கள் உதவுவதாக தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த செய்திகள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்ததால் மீண்டும் இந்த செய்தி வைரலாக தொடங்கிவிட்டது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ஜனாதிபதி தாமஸ் ஜபர்சன் உட்பட பலர் இந்த பேய்களை எதிர்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் பேய் தான் உலவுவதாக கூறுகிறார்கள். இதேபோன்று usa டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலும் சந்தேகம் இன்றி ஆப்ரகாம் லிங்கனின் பெய்தாலும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர். இதேபோன்று அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆன அபிகெயில் ஆடம்சின் ஆவியும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஸின் மகள்கள் இருவரும் ஆப்ரகாம் லிங்கன் அறையில் இருந்து இசை கருவி ஒலிக்கும் சத்தத்தை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோன்று ஆபிரகாம் லிங்கனின் ஆவியை பலரும் பார்த்துள்ளதாக தெரிவித்ததாக அந்த செய்திகளில் வெளிவந்துள்ளது.