அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் ஒன்று விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட முயன்றது. அப்போது திடீரென விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்தானது. இந்த விமானம் ஹோண்டா HA420 விமானம் ஆகும். விமானம் விழுந்த வேகத்தில் அந்த இடம் தீ பிடித்து எறிய தொடங்கியது. இதில் 12 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அரிசோனாவை சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால் (43), ரஸ்தின் ராண்டால் (48), ட்ரூ கிம்பால் (44) மற்றும் கிரஹாம் கிம்பால்(12) என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5-வது நபர் தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.