எகிப்து தலைநகர் கொய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேட்டர் கொய்ரோவின் ஒரு பகுதியான கிஷாவில் உள்ள மான்ஷாட் எல் காண்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகு விபத்தில் சிக்கியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் எகிப்திய பவுண்டுகளும் காயமடைந்தவர்களுக்கு 20,000 பவுண்டுகளும் இழப்பீடாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.