சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. கர்ப்பிணி பெண்களிடம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அபாயகரமான மைக்ரோ பிளாஸ்டிக் நச்சுக்கொடி பாதித்தால் அது பூமியில் உள்ள அனைத்து பாலூட்டிகளையும் பாதிக்கும் என ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மேத்யூ காம்பன் என்பவர் கூறியுள்ளார்.