இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த வடுவானது இன்னும் அழியாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த குண்டு வீச்சு சமயத்தில் உருகிப்போன கைக்கடிகாரம் ஒன்று தற்போது ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

1945வது ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 8.15 மணியுடன் கடிகாரம் உருகி நின்றுள்ளது. பிரிட்டனை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கண்டெடுத்த இந்த கைக்கடிகாரத்தை, பாஸ்டனை சேர்ந்த ஆர்.ஆர் நிறுவனம் தற்போது ஏலத்தில் விற்றுள்ளது