பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்கட்டமாக நெல்லை, கோவை, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி, குமரியில் பொன்னார், நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம். குறிப்பாக குமரி தொகுதியில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது.