திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவர் பேய் பிடித்ததாக கூறி ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. காக்காதோப்பு பிரிவில் இருக்கும் முனியப்பன் கோவிலில் ஆனந்த் என்பவர் பூசாரியாக உள்ளார். அந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்களை உனக்கு பேய் பிடித்துள்ளது. பேய் விரட்ட வேண்டும் எனக் கூறி கருங்காலி குச்சியால் ஆனந்த் தாக்கியுள்ளார்.
கடந்த வாரம் அந்த கோவிலுக்கு வேடசந்தூரை சேர்ந்த ஒரு பெண் வந்தார்m அவரை ஆனந்த் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த பெண் வெளியே யாரிடமும் சொல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆண்களுடன் வராமல் தனியாக வரும் பெண்களை தேர்ந்தெடுத்து பேய் பிடித்ததாக கூறி ஆனந்த் அடித்து துன்புறுத்தியுள்ளார். அமாவாசை அன்று ஒரு பெண் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வந்தார். உனக்கு பேய் பிடித்து விட்டது. பேயை விரட்ட வேண்டும் என குச்சியால் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் யார் நீ? உன்னுடைய பெயரை சொல் என கேட்டுக்கொண்டே தாக்கியுள்ளார். பூசாரி செய்வது தவறு என்பதை அந்த கோவிலுக்கு சென்ற ஐயப்பன் கோவில் குருசாமி அறிந்தார். அவர் பூசாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அமைதியாக இரு என கூறினார். அப்போது பூசாரி வேண்டுமென்றே சாமி வந்தது போல ஆடி அவரையும் அடிக்க பாய்ந்தார். தடுக்க முயன்ற பெண்ணின் தாயையும் பூசாரி தாக்க முயன்றார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.