ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையில் ராஜோரி மாவட்டம் உள்ள நிலையில் இங்கு பதால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் கடந்த 19ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இதுவரையில் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வரும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் அந்த மர்ம மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிடும் உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பலர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து வருவது ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.