நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடந்த பொதுக்குழு நிகழ்ச்சியின் போது விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்தார். நடிகர் விஜய் தன்னுடைய தம்பி என்றும் அவர் அரசியலுக்கு வந்ததற்கு தன்னுடைய முழு ஆதரவு இருக்கும் என்றும் சீமான் கூறினார். அதோடு கூட்டணி தொடர்பாக எல்லாம் விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் வருகிற தேர்தலில் அது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் விஜயை யார் விமர்சித்தாலும் என்னுடைய முழு ஆதரவும் என்னுடைய தம்பிக்கு தான் என்றும் கூறினார்.

அதோடு விஜய் தன்னை எதிர்த்தால் கூட நான் அவரை மட்டுமே ஆதரிப்பேன் என்றும் கூறினார். இப்படி பேசிய சீமான் தற்போது விஜய்யை மிகவும் கடுமையான வார்த்தைகளால் அதாவது அவருடைய முதல் மாநாடு முடிந்த நிலையில் அவர் கொள்கைகளை வெளியிட்ட நிலையில் அந்த கொள்கைகளில் உடன்பாடு இல்லாததால் சீமான்  இப்படி விமர்சித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக விஜயின் கட்சி கொள்கைகள் கொள்கையே கிடையாது என்றும் அது ஒரு கூமுட்டை குறிப்பாக அழுகிய கூமுட்டை என்று தெரிவித்துள்ளார். அதோடு ஒன்று அந்தப் பக்கம் அல்லது இந்த பக்கம் சாலையில் நிற்க வேண்டும் இரண்டிற்கும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய் என்றும் கூறியுள்ளார். மேலும் நீங்க பெரியார் அம்பேத்கரை பற்றி இனிதான் படித்து தெரிந்திருக்க வேண்டும். நாங்க ஏற்கனவே படிச்சி பிஎச்டி முடித்து விட்டதோடு பாண்டிய நெடுஞ்செழியனின்  பேரன் பேத்திகள் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு  வேலு நாச்சியார் யார் என்று சொல்லுங்கள் தம்பி. நான் வரவில்லை என்றால் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் யார் என்பது தெரியாமல் போயிருக்கும். மேலும் நீங்கள் வைத்திருக்கும் கட்டவுட் நான் வரைந்தது தம்பி என்று கூறியுள்ளார்.