தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகக்கூடிய படம் “வாத்தி”. இதில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.

அதன்பின் ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, எனக்கு தெலுங்கு அவ்வளவா பேசவராது. நீங்க என் பக்கத்து ஸ்டேட்தான. இங்கிலீஸ்ல எதுக்கு பேசனும், தமிழில் பேசுறேன் புரியும்ல என கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறிதுநேரம் தமிழில் பேசிய பின்னர் ரசிகர்கள் சிலர் புரியவில்லை என கூறியதால் ஆங்கிலத்தில் தனுஷ் பேசினார்.