மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பிகே ரேஸி. இவர் மலையாள சினிமாவில் முதன் முதலாக பேசாத படமாக வெளியான விகதகுமாரன் படத்தில் உயர் ஜாதி பெண்ணாக நடித்திருப்பார். கடந்த 1903-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்மா பகுதியில் பிறந்த பி கே ரோஸி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி உயர் ஜாதி பெண்ணாக நடிக்கலாம் என அந்த காலகட்டத்தில் ரோஸிக்கு பல கண்டனங்கள் எழுந்தது.

கண்டனங்களுக்கு ரோஸி அஞ்சாமல் இருந்த போதும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி கேசவ பிள்ளை என்ற லாரி ஓட்டுனரை திருமணம் செய்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து கன்னியாகுமரியில் வாழ்க்கையை தொடங்கினார். இவரின் நினைவாக பின்னாளில் பிகே ரோஸி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு சினிமா துறையில் பெண்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பிகே ரோஸியின் 160-வது பிறந்த நாள் என்பதால் கூகுள் நிறுவனம் அவரை கௌரவிக்கும் விதமாக டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.