நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடந்த ஒரு பொதுக்குழு நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மிகவும் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜயின் கொள்கைகள் அது கொள்கை கிடையாது என்றும் கூமுட்டை அதுவும் அழுகிய கூமுட்டை என்றும் கூறியுள்ளார். அதோடு அது நடுநிலை அல்ல என்றும் கொடு நிலை என்றும் ஒன்று சாலையின் அந்தப்பக்கம் அல்லது இந்த பக்கம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். அதன் பிறகு நான் குட்டி கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார் மற்றும் அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் படித்து பிஎச்டி முடித்து விட்டோம்.
நீங்கள் சங்க இலக்கியத்தை இனிமேல் தான் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியனின் பேரன் பேத்திகள் நாங்கள் என்று கூறினார். மேலும் அரசியலுக்கு வந்த புதிதில் விஜய்க்கு எதிராக பேசியவர்களை விமர்சித்த சீமான் தன்னுடைய முழு ஆதரவும் அவருக்குத்தான் என்றும் தன்னுடைய தம்பி என்றும் விஜய் என்னை எதிர்த்தாலும் நான் எப்போதும் அவருக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பேன் என்றும் கூறினார். மேலும் இப்படி கூறிய சீமான் தற்போது விஜயை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.