சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு 560 வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 58,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் 7370 வரையில் விற்பனையாகிறது.
கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை 680 வரையில் குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து 7875 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 106 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.