தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் அன்பில்மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி எழுத வேண்டும்.

தேர்வெழுதும் மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.