பொதுவாக தினமும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் அதே டிக்கெட் மூலமாக எலக்ட்ரிக் ரயில்களிலும் பயணிக்கலாம் என்று விதிகள் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் தாம்பரம், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் இருந்து பக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு பயணிக்கும் பொழுது பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளுக்கு அபதாரம்  விதிப்பதாக புகார் எழுந்தது. இது ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து தெற்கு ரயில்வே துறை வணிக மேலாளர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் .

அதில் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து உயர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள், இடையே உள்ள நிறுத்தங்களில் இறங்கினால் அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை மின்சார ரயிலில்  அதே தடத்தில் பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவிபின் படி விரைவு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதேதடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் செல்வதற்கு தனியாக டிக்கெட் எடுக்க தேவை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.