தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே சொந்த ஊர் திரும்பும் பயணிகள் உடைய வசதிகளுக்காக சென்னையிலிருந்து ஐந்து ரயில்கள் கூடுதலாக இயக்க ப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகளுடைய கோரிக்கையை ஏற்று தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் ஜனவரி 14-ம் தேதியன்று இரவு 10.20 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. மேலும் இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி திருநெல்வேலி மாலை 5:50 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது